லெபனானின் தெற்குப் பகுதி முழுவதையும் ஒரு காலத்தில் இஸ்ரேல் அத்துமீறி ஆக்கிரமித்திருந்தது. 2000ம் ஆண்டில்தான் இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து விலகின. இஸ்ரேலியப் படைகளைத் துரத்துவது ஒன்றே குறியாகத் தோன்றிய இயக்கம்தான் ஹிஸ்புல்லா. வெறும் போராளி இயக்கமல்ல அது. லெபனானில் ஹிஸ்புல்லா ஓர் அரசியல் சக்தியும் கூட. எந்தத் தீவிரவாத இயக்கம் தம் தேசத்துக் குழந்தைகளுக்காக இலவசப் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன? விவசாயம் பெருகுவதற்காகத் தனிப்பட்ட விவசாய இயக்கங்கள் நடத்துகின்றன? பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன? இலவச மருத்துவமனைகள் நடத்துகின்றன? இப்படிப்பட்ட காரியங்கள் செய்யும் ஓர் இயக்கம் எப்படி ஆள் கடத்தும், விமானம் கடத்தும், படுகொலைகளை நிகழ்த்தும் என்று சந்தேகம் வரலாம். ஹிஸ்புல்லா இவற்றைச் செய்வதும் உண்மைதான். ஹிஸ்புல்லாவின் அத்தனை செயல்பாடுகளுக்கும் பின்னால் உள்ள காரணங்களை அப்பட்டமாக விவரிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.