இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்?
எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக?
மனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன?
நாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது சாதாரண ஜெர்மானியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஹிட்லர் மட்டும்தான் அனைத்துக்கும் காரணமா?
ஹிட்லரை அவருடைய அத்தனை சிக்கல்களோடும் புதிர்களோடும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாஜி ஜெர்மனி குறித்த மிக விரிவான ஒரு வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது.
அத்தகைய ஒரு பார்வையை வழங்குவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
Be the first to rate this book.