திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகச் செய்யும் என்பது. மன உருக்கம் பிறர் செய்த உதவியினை நினைந்த போதும், பிறரது பருமையினை எண்ணிய போதும் உண்டாவது. திருவாசகத்தில் இறைவனது பெருமையினையும், அவன் காட்டிய கருணையினையும் நினைந்து பாடிய பாடல்கள் பலவுள. அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலைவாராது? 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மூத்தோர் வாக்கு. திருவாசகம் வேறு, சிவன் வேறு என்று எண்ணாது. திரவாசக ஏட்டினைப் பலர் நாடோறும் பூசையில் வைத்து வழிபடுவதை இன்றும் காணலாம். இது மற்றோர் சிறப்பு ஆகும்.
Be the first to rate this book.