இந்துத்துவ பாசிசம் குறித்து பெருமளவு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தாலும், பெரும்பாலும் அவை பாசிசத்தின் மேற்கட்டுமானம் பற்றியே பேசுவதாக உள்ளன. அதன் பொருளியல் அடித்தளம் பற்றிய விவாதம் நடைபெறுவதாக சான்றுகள் இல்லை. இனி அது நோக்கிய நகர்வை நாம் செய்தாக வேண்டும். இல்லையெனில் சரியானதொரு பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டி பாசிசத்தை வீழ்த்த இயலாது. இந்துத்துவ பாசிசத்தை வெறும் மதவாதமாக மட்டுமே பார்க்கும் போக்கு உள்ளதால் மதச்சார்பின்மை எனும் பேரில் காங்கிரசுக்கு முட்டு கொடுப்பதும் இதை வெறும் பார்ப்பன பாசிசமாக குறுக்குவதன் மூலம் பார்ப்பனர் அல்லாத பாசிஸ்டுகளுக்கு துணை போவது என்பதும் இந்துத்துவ பாசிசத்தை நிச்சயமாக பலப்படுத்தும்.
Be the first to rate this book.