இந்து மதத்தின் புதிர்களையும் வன்முறைகளையும் தோலுரித்து மிக விரிவான ஆய்வுகளைச் செய்தவரும், மிகப் பெரிய மக்கள் திரளை இந்து மதத்திலிருந்து விடுவித்து பௌத்தம் தழுவச் செய்தவருமான அண்ணல் அம்பேத்கரை ஓர் இந்துத்துவ வாதியாக நிறுவ முயலும் வன்மத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்ட அற்புதமான ஆய்வு நூல் இது.
- அ. மார்க்ஸ்
அம்பேத்கர் இந்து மதத்தைக் கடுமையாக விமரிசித்தார் என்றும் அதிலிருந்து வெளியேறி, பௌத்தத்தைத் தழுவினார் என்றும் வாசித்திருக்கிறோம். எனில் இந்துத்துவர்கள் ஏன் அம்பேத்கருக்கு இன்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்? அவரை ஏன் இந்து மதத்துக்குள் உள்ளிழுக்க முயற்சி செய்கிறார்கள்?
இந்து மதம், பிராமணியம், இந்துத்துவம் பற்றிய அம்பேத்கரின் பார்வை என்ன? அம்பேத்கர் முன்மொழிந்த பௌத்தம் எத்தகையது? அது இந்து மதத்தின் ஒரு பகுதியா அல்லது தனியொரு பிரிவா? தம்மத்துவம் என்றால் என்ன?
இன்றைய சமூகத்துக்கு, நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வை அளிப்பது இந்துத்துவமா அல்லது புத்தரின் தம்மத்துவமா?
அம்பேத்கரையும் பௌத்தத்தையும் கொச்சைப்படுத்துபவர்களுக்கு ஒரு விரிவான, ஆதாரபூர்வமான, தர்க்கரீதியான மறுப்பு இந்நூல்.
Be the first to rate this book.