இந்துத்துவப் பாசிசக் கூட்டை அறிந்து கொள்வது என்பது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது இந்தியாவில் இந்துத்துவத்தை எதிர்த்த போராட்டம் என்பது ஆரிய இனக் கோட்பாட்டை உருவாக்கிக் கொடுத்து அதற்கு உண்மையான முதுகெலும்பாகத் திகழும் ஏகாதிபத்தியக் காலனியாதிக்கவாதிகளை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியே. மாறாக வெறும் இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு பேசுவது அதன் உண்மையை மூடிமறைப்பதேயாகும்.
ஆகவே இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்து ஒரு சரியான செயல்தந்திரத்தை உருவாக்குவதற்கு இந்நூல் துணைபுரியும் என்பது தெள்ளத் தெளிவு. காலத்தின் தேவைகருதி இந்த நூலைப் புதுமை பதிப்பகம் வெளியிடுகிறது.
Be the first to rate this book.