இன்றைய சூழலில் ஒருபக்கம் இந்துப் பண்பாடும் மெய்யியலும் காழ்ப்புடன் புறக்கணிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் அதிகாரநோக்குடன் திரிக்கப்படுகின்றன. இரண்டுமே அழிவுச்சக்திகள் என்று சொல்லும் நிலைபாடு கொண்டவை இக்கட்டுரைகள்.
இந்துப் பண்பாடு என்பது நம் மரபு, நம் பண்பாட்டுசெல்வம், நம் ஆழுள்ளம் அமைந்திருக்கும் வெளி. அதன்மேல் காழ்ப்பை, விலக்கத்தை உருவாக்கிக் கொண்டால் நாம் ஆழமற்றவர்களாவோம். மேலோட்டமான அரசியலுக்கு அப்பால் செல்லமுடியாதவர்கள் ஆவோம் என இவை முன்வைக்கின்றன.
நம் பண்பாட்டின் மேல் நாம் விலக்கம் கொண்டால் அப்பண்பாட்டின் ஆழத்தில் தங்கள் உள்ளங்களை அமைத்துக்கொண்டு இங்கே இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களிடமிருந்து அயன்மைப்படுவோம். அதன்பின் அசலான சிந்தனையையோ கலையையோ நம்மால் உருவாக்க முடியாது என்று வாதிடுகின்றன.
ஜெயமோகன் அவருடைய இணைய தளத்தில் வாசகர்களுடன் உரையாடலாக நிகழ்த்தியவை இவை.
Be the first to rate this book.