'கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை' என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆரிய குடியேற்றம் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் ஆகிய விஷயங்களை ஆழமாக விவாதிக்கிறது.
இன்றைய அறிவுலகில் பெரிதும் போற்றப்படும் வரலாற்று அறிஞராகத் திகழும் பேராசிரியர் ரொமீலா தாப்பர் பண்டைக்கால இந்தியாவிலிருந்து தொடங்கி இன்றைய காலம் வரை சமூகத்தில் எற்பட்டுள்ள மாற்றங்களை இயங்கியல் நோக்கில் உரிய ஆதாரங்களோடு தொடர்ந்து நிறுவி வருபவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி 1991 இல் ஓய்வு பெற்ற அவர். தற்போது அப்பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்து வருகிறார்.
Be the first to rate this book.