காந்தி தன்னை ‘இந்து’ என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் ‘நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார். ‘இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது’ என்கிறார் கோல்வால்கர். ‘இந்து நாகரிகத்தோடும் இந்து பண்பாட்டோடும் தொடர்புகொண்டிருப்பவர்களே இந்துக்கள்’ என்கிறார் சாவர்க்கர். ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்று சசி தரூர் விளக்குகிறார். ‘நான் ஏன் இந்து அல்ல’ என்று காஞ்சா அய்லய்யா விவரிக்கிறார். ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ என்கிறார் பன்வர் மெக்வன்ஷி. ‘நான் ஏன் ஓர் இந்து பெண் அல்ல’ என்று வாதிடுகிறார் வந்தனா சோனால்கர். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இந்து மதத்தை ஒழிக்காமல் சாதிகளை ஒழிக்க முடியாது’ என்கிறார்கள் அம்பேத்கரும் பெரியாரும். அதேசமயத்தில், ‘இந்து என்ற தொகுப்பு காலனியர்களால் உருவாக்கப்பட்டது’ என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதையெல்லாம் மீறி, பல கோடி மக்கள் தங்களை ‘இந்து’ என்று பதிவுசெய்கிறார்கள். மதச்சார்பின்மைவாதிகள், ‘நாங்கள் இந்து அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்களே தவிர இந்து மதத்துக்கு அல்ல’ என்கிறார்கள். ‘இந்து என்ற கருத்தாக்கம் ஒரு வாழ்க்கைமுறை’ என்கிறது உச்ச நீதிமன்றம். உண்மையில், யார் இந்துவாக வாழ்கிறார்கள்? இந்து என்ற கருத்தாக்கத்தை இந்தப் புத்தகம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது!
Be the first to rate this book.