இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினராலும் இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களில் 30 இலட்சம் பேராலும் இந்து மதம் பின்பற்றப்படுகிறது. இந்தச் சுருக்கமான அறிமுகத்தில் ஒரு முக்கியமான மதத்தைப் பற்றிச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மற்றும் முழுமையான நம்பிக்கைக்குரிய தகவல்களை ஒருங்கிணைத்து இருபதாம் நூற்றாண்டில் அந்த மதம் சந்திக்கும் சவால்களையும் தகவல்களையும் ஒன்றிணைத்து கிம் நாட் நமக்குத் தருகிறார். இந்து மதத்தின் முக்கியக் கூறுகளாக விளங்கும் வேதம் மத நூலாக இருப்பதை மையப்படுத்துதல், பிராமணர்களின் பங்கு, குருக்கள், தெய்வீக உண்மைகளைப் பரப்பும் கதைசொல்லிகள், இராமாயணம் போன்ற இதிகாசங்களின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி அவர் இந்த நூலில் விவாதிக்கிறார். தற்காலச் சமூகத்தில் பெண்கள், தலித்துகள் (தீண்டத்தகாதவர்கள்) போன்றவர்களும் இவர் ஆய்வில் இடம்பெறுகிறார்கள்; இந்து மதத்தினருக்கும் இந்து அல்லாதவர் களுக்கும் படிக்கும் ஆர்வத்தை இந்த நூல் தூண்டும்.
Be the first to rate this book.