இந்து வகுப்புவாதத்தை சங் பரிவாரமும் பாஜகவும் மட்டுமே வளர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியிலும் இந்திய தேசியவாதத்திலும் தொடக்க காலத்திலேயே காணப்பட்ட இந்து வகுப்புவாதத்தைப் பட்டேல் முதல் சோனியா காந்திவரை பேணிப் பாதுகாத்து வந்துள்ளதை இந்த நூல் சொல்கிறது.
காந்தியும் நேருவும் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது; இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கியக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் வட இந்திய இந்துப் பெருமுதலாளிகள்; பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட செயற்கையான இந்தி ஆட்சிமொழியாக்கப்பட்டது; அரசு விவகாரங்களில் மதம் தலையிடாத, அனைத்துத் தேசிய இனங்களும் முழுமையான தன்னாட்சி பெற்ற புதிய இந்தியா தேவைப்படுகிறது போன்றவை இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றில் அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.