ஜூலை 2006 தொடங்கி ஒரு மாத காலம் நீடித்த இஸ்ரேல்-லெபனான் யுத்ததின் கதாநாயகனாக நமக்கு அறிமுகமான இயக்கம், ஹிஸ்புல்லா.
கடத்துவார்கள், கொல்வார்கள், துல்லியமாகத் திட்டமிட்டு குண்டு வீசுவார்கள், நொடிப்பொழுதில் தற்கொலைப் படையாக மாறி வெடித்துச் சிதறுவார்கள். பீரங்கிகளையும் நவீன துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு நேரடியுத்தமும் செய்வார்கள்.
ஓரு தீவிரவாத இயக்கமாக அமெரிக்க,இஸ்ரேலிய ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இன்னொரு முகம் உண்டு. லெபனானில் ஹிஸ்புல்லா ஒர் அரசியல் இயக்கமும் கூட. இரண்டு கேபினட் அமைச்சர்கள் உள்பட, நாடாளுமன்றத்தில் பதினான்கு உறுப்பினர்களை வைத்திருக்கும் மிக முக்கியமான அமைப்பு.
பி.எல்.ஓ., ஹமாஸ் உள்பட பெரும்பாலான போராளி இயக்கங்கள் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்து விட்ட நிலையில், விடாப்பிடியாக ‘இஸ்ரேலை ஒழித்துவிட்டுதான் மறுகாரியம்’ என்று இன்றுவரை மூர்க்கமாக நிற்கிற விஷயத்தில்தான் ஹிஸ்புல்லா மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது.
சித்தாந்த பலம், அதிர வைக்கும் ஆள்பலம், பணபலம், வலுவான சர்வேதேச நெட்வொர்க் என்று வளர்ந்து நிற்கும் ஹிஸ்புல்லாவை, அல்காயிதாவுக்கு நிகரானதொரு இயக்கமாகக் கருதுகிறது அமெரிக்கா.
நூலாசிரியர் பா. ராகவன், பயங்கரவாத இயக்கங்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்துவருபவர். அல்காயிதா குறித்த இவரது முந்தைய நூலும், ’டாலர் தேசம்; ‘ நிலமெல்லாம் ரத்தம்’ போன்ற அரசியல் வரலாறுகளும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.
இந்நூலில், ஹிஸ்புல்லாவின் நெஞ்சு பதை பதைக்கச் செய்யும் நடவடிக்கைகளையும் அதன் பின்னால் உள்ள நியாய, அநியாயங்களையும் லெபனானின் அரசியல் சரித்திரப் பின்னணியுடன் விறுவிறுப்பாக அறிமுகம் செய்கிறார்.
Be the first to rate this book.