ஒரு ஃபோர்ட் வாங்குங்கள், மீதியைச் சேமியுங்கள் என்று எழுதப்பட்டிருந்த தன் நிறுவனத்துக்கான விளம்பர வாசகம் ஹென்றி ஃபோர்டுக்குத் திருப்தி தரவில்லை. தன் மேஜையிலிருந்த பென்சிலை எடுத்தார். ஒரே ஒரு சொல்லை மாற்றினார். ஒரு ஃபோர்ட் வாங்குங்கள். மீதியைச் செலவழியுங்கள்.
அவருக்கு மக்கள் மனம் தெரியும். அவர்களது தேவைகள் புரியும். வெகு அநாயாசமாகத் தம் தொழிலின் உச்சத்தைத் தொட்டவர் அவர். ஒரு காலத்தில் கார் என்றாலே ஃபோர்ட் என்கிற நிலைமைதான் அமெரிக்காவில் இருந்தது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடு களிலும் அதுவேதான் நிலைமை.
சரித்திரச் சாலையில் ஃபோர்ட் பதித்த அளவுக்கு, சாதனை டயர்த் தடங்களை வேறு யாராலும் பதித்திருக்க முடியாது. ஃபோர்டு ஒரு சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப் பான்மை கொண்ட சர்வாதிகாரி. சவால்களை மட்டுமே விரும்பியவர். செய்யும் தவறுகள் கூடப் பெரிய சாதனைகள் செய்வதற்கு அவசியத் தேவைகளாக இருக்கலாம் என்பது ஃபோர்டின் வேதவாக்கு.
அவர் வெறும் கார் கம்பெனி முதலாளி இல்லை. ஒரு 'கார்'காலக் கதாநாயகன். ஃபோர்டின் வாழ்க்கை, அவரது கண்டு பிடிப்பைப் போலவே வேகமும் விறுவிறுப்பும் சொகுசும் நிரம்பியது. கற்றுக்கொள்ள சில பாடங்களையும் உள்ளடக்கியது.
Be the first to rate this book.