உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி.
இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்பூச்சியைப் போல சுற்றிச் சுற்றி வருகிறது. சிறைபடுத்த முயலும் கைகளைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது.
முற்றிலும் புதியதொரு அனுபவத்தை முற்றிலும் புதியதொரு நடையில் கிண்டலும் கேலியும் இழையோட அளித்திருக்கிறார் இ.பா. 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக இன்று வரையில் கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
Be the first to rate this book.