இந்த நூலில் ஹதீஸின் ஆதாரபூர்வத் தன்மை எனும் நுட்பமான பொருள் குறித்துப் பேசப்படுகின்றது. ஹதீஸ் அறிவிப்புகளின் உள்ளடக்கத்திற்கான தொடர் வரிசை, அதன் நம்பகத் தன்மை, அதன் அறிவிப்பாளர் வரிசையை உறுதிப்படுத்தும் முனைப்பு ஆகியவற்றில் செலுத்தப்படும் கவனத்தை விட, பிரதான ஹதீஸ் கிரந்தங்களின் தொகுப்பாளர்கள் பிரிகோடுகளின் முறைமைகளில் செலுத்தியுள்ள கவனம் மற்றும் இன்றைய சூழலில் இஸ்லாத்திற்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிட ஹதீஸ்கள் எனப் பெயரியன பயன்படுத்தப்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாதுள்ளமை, அவையே இஸ்லாமிய வன்முறையும் பிற்போக்குவாதமும் என்ற கோட்பாட்டை ஆதரித்துப் பேசுவதற்காகப் பரந்த அளவிலும் பயங்கரமான முறையிலும் விளம்பரம் செய்யப்படுகின்றமை என்பனவெல்லாம் இங்கு பேசப்பட்டுள்ளன.
2010ல் வெளியிடப்பட்ட Authentication of Hadith: Redefining the Criteria எனும் இந்த நூலின் ஆசிரியரான கலாநிதி இஸ்ரார் அஹமத் கான் இந்தியாவின் அலிகர் பல்கலைக் கழகத்தில் இறையியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். தற்பொழுது மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் (IIUM) குர்ஆன் மற்றும் சுன்னா கற்கைத் துறை இலாகாவில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவருடைய பிரதான கற்கைநெறி, போதனை, ஆராய்ச்சி என்பன எல்லாம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறைகளுடன் சம்பந்தப்பட்டனவாக இருக்கின்றன. Quranic Studies: An Introduction (2000), The Theory of Abrogation: A Critical Evaluation (2006), Understandig the Quran: A Reflection (2006) என்பன அவரது ஏனைய ஆக்கங்களுள் சிலவாகும்.
Be the first to rate this book.