அரோல்ட் என்கிற சிறுவனது கையிலொரு ஊதாக்கலர் கிரேயான் கிடைத்தது. அதைக் கொண்டு மனம்போன போக்கில் ஆசையாசையாய் வரைந்து பார்த்தான். அவன் வரைந்த சாலை, நிலா, காடு, கடல், படகு என அனைத்தும் தனக்கு எதிரில் உயிர்பெறுவதைக்கண்டு வியந்தான். தனது கைகளால் வரைந்த மலையில் ஏறியவன் தடுமாறிக் கீழேவிழ, ஒரு ராட்சச பலூனை வரைந்தான். அப்பலூன் கயிற்றைப் பிடித்தேறித் தப்பித்தான். குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான திருப்பங்களை உள்ளடக்கிய கதை. இக்கதையை எழுதியவர் திரு. க்ரோகட் ஜான்சன். 'வெஸ்டன் வுட் ஸ்டுடியோ' நிறுவனம் இக்கதையை குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அரோல்டின் சாகச வரிசைத் திரைப்படங்கள் 'எம்மி விருது' பெற்றுள்ளன. 'தேசிய கல்விக் கூட்டமைப்பு' வெளியிட்ட உலகின் 100 புகழ்பெற்ற சிறுவர் கதைகளில் ஒன்றாக இப்புத்தகம் தேர்வாகியுள்ளது.
5
குழந்தைகளுக்கு கட்டாயம் வாங்கி குடுங்கப்பா ... இது மாதிரி புத்தகங்கள் தான் குழந்தைகளை புதிய வழிகளில் சிந்திக்கவும் வாசிக்கவும் தூண்டும் ...
P JOTHIMUTHU 07-11-2022 09:25 pm