இக்கதைகளில் அன்னப்பறவை, தவளை, வாத்து, எலிகள், நீர்வாழிகள், பூக்கள், நிழல்கள் என பல்வேறு ஜீவராசிகளும் உயிர்த்தெழுந்து மனிதர்களைப்போலவே பேசுகின்றன, சிந்திக்கின்றன, செயலாற்றுகின்றன. உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. நற்செயல்களைப் புரியும் தேவதைகளும், தீயச்செயல்களைச் செய்யும் சூனியக்காரக் கிழவிகளும் இக்கதைகளில் உண்டு. ஒன்றுக்கொன்று உதவிபுரிந்துகொண்டு வாழ்தலின் எளிய நோக்கத்தை, அன்பின் இயல்பாக வெளிப்படுத்தும் பாத்திரங்களும் உலவுகின்றன. இவை அனைத்தும் அறம் சார்ந்த வழிகளில் ஆனந்தமய வாழ்வை நோக்கிய உந்துதல்களாகவே அமைந்திருக்கின்றன. இதுவே இக்கதைகளின் சிறப்பு.
Be the first to rate this book.