மனிதர்களை அவர்கள் அறியாமல் செரிமானம் செய்து கொள்கிறது காலம் எனும் பெரும்பசிக் கடவுள். ஒவ்வொருவருக்கும் அது அள்ளித் தருகிற ஈட்டுத்தொகை தான் ஞாபகம் என்பது. ஞாபகங்களை நோக்கி மறுபயணம் எப்போதும் சிலாக்கியமான ஒன்று.
மதுரை என்னும் மகா நகரத்தின் இன்னொருவனாக விடாப்பிடியாக நாற்பத்திச் சொச்ச வருடங்களாக ஒரே நகரத்தின் பல ஸ்தானஸ்தலங்களில் நகர்ந்தபடி இருக்கும் ஊர் தாண்டாத் தேர் என் மனசு. அதனை அகழ்கிற சந்தர்ப்பங்களில் இரண்டாவதாக ஞாபக நதியைச் சொல்ல விரும்புகிறேன். செய்தியும் கதையும் காலமும் கலந்த ஒருவனது ஞாபகங்களைக் காகிதப்படுத்துகிற சொற்சாத்தியம் இந்தப் புத்தகம்.
- ஆத்மார்த்தி
Be the first to rate this book.