எனக்கு ஏன் குரு தேவையாகிறார்? நான் ஏன் தியானம் பழக வேண்டும்? மந்திரங்களினால் என்ன பயன்? ஆன்மிகப் பயிற்சியில் சுவாசம் ஏன் முக்கியமாகிறது? ஆன்மிகப் பாதையில் பாலியலின் இடம் என்ன? அமைதியற்ற மனதை என்ன செய்ய?
தன்னையும் உலகையும் புரிந்து கொள்வதற்கான இத்தகைய அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிறது, ’குரு’.
வாயில்கள் எனும் உருவகம் மூலமாக, வாசகர் வெவ்வேறு ‘அறை’களுக்குள் வரவேற்கப்படுகிறார். ஒவ்வொரு அறையிலுமுள்ள ஆன்மீக மெய்மைகளை ஆராயவும் உணரவும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இறுதியில், இந்த ஆன்மீகக் கருத்துகள் எவ்வாறு இறையுடன் இணைவதெனும் அறுதி இலக்குக்கு பயில்பவரை இட்டுச் செல்லும் கருவிகளாகின்றன என்பதை வாசகர் உணர்கிறார்.
நீங்கள் உங்களது ஆன்மிகப் பயிற்சியைத் தொடங்க விரும்பினாலும், இந்திய ஆன்மிகத்தின் மையக் கருத்துகளைப் புரிந்துகொள்ள விரும்பினாலும், புகழ்பெற்ற நாடகாசிரியரும் ஆன்மிக வழிகாட்டியுமான ஹெச்.எஸ். சிவபிரகாஷின் இப்படைப்பு உங்கள் பாதையை ஒளிரச் செய்யும் என்பது உறுதி.
Be the first to rate this book.