அரசியல் செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் நிகழும் கொலைகளை நோக்கி இட்டுச்செல்லும் சம்பவங் களில் தொடங்கும் கதை, வெறுமனே யார் கொலை செய்தது என்பதைத் தாண்டி பல தளங்களில் மர்ம நாவல்களைவிட விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. காதல், கவிதையின் குரல், கலையின் ஆற்றுப்படுத்தும் ஆற்றல், அரசியல், புரட்சி, தென்னமெரிக்க வரலாறு என பலவும் இக்கதையாகவும் இக்கதையின் அடித்தளமாகவும் இருக்கின்றன. 1980களின் தென்னமெரிக்காவின் அரசியல் நிலையற்ற காலங்களைப் பற்றிய சில பார்வைகளின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது. இவற்றிற்கிடையே அரசியல் ஒடுக்குமுறையும், அதனிடையே சில தனிமனிதர்களின் மீட்சியுமே இந்நாவல்.
- எல். ஜே. வயலட்
ஹுவான் மனுவேல் மார்க்கோஸ்
ஹுவான் மனுவேல் மார்க்கோஸ் பராகுவேய ஆசிரியரொருவருக்கும் ஸ்பானிய ரிபப்ளிகன் அகதியொருவருக்கும் மகனாக ஜூன் 1, 1950இல் அசுன்சியோனில் பிறந்தார். மாட்ரிடின் காம்ப்ளுடென்சே பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டமும், பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்று, மேற்படிப்பு ஆய்வுகளை யேல், ஹார்வர்ட் பல்கலைக்கழங்களில் மேற்கொண்டார். லாஸ் ஏஞ்சலீஸில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, பராகுவேயின் மிகப்பெரிய தனியார் மேற்கல்வி நிறுவனமான நோர்த்தே பல்கலைக்கழக்த்தின் தலைவராக 1991இல் பொறுப்பேற்றார். பராகுவேய செனேட்டில் கல்வித்துறை கமிட்டி தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்காக்களில், ஐரோப்பாவில், ஏசியாவில் பல நாடுகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறார், உரையாற்றியிருக்கிறார். பல கௌரவ முனைவர் பட்டங்கள், பேராசிரியர் பதவிகள், விருதுகள் பெற்றிருக்கிறார். கார்சியா மார்க்கேஸிலிருந்து போஸ்ட்பூம்வரை (மாட்ரிட், 1986, கட்டுரைகள்), கவிதைகளும் பாடல்களும் (அசுன்சியோன், 1987, கவிதைகள்), நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட குந்தரின் கூதிர்காலம் உள்ளிட்ட பல புத்தகங்களை இயற்றியிருக்கிறார்.
Be the first to rate this book.