கிர்கீஸியாவில் 1952இல் செகர் என்ற கிராமத்தில் பிறந்த சிங்கிஸ் ஜத்மாத்தவ் கல்விகற்ற முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ்ப்பெற்றவை. 'என் முதல் ஆசிரியர்', 'ஜமிலா', 'ஒட்டகங்கள்' ஆகிய சிறந்த நவீனங்களின் வரிசையில் அமைவது 'குல்சாரி' என்ற இந்தவீனம். இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்ற பரப்புரையை இந்தக் குறுநாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்தக் கதை படிப்போர் நெஞ்சைக் கவர்ந்து ஈர்க்கிறது. இந்தக் குறுநாவலில் இடம்பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.
Be the first to rate this book.