கலிவருக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆசை. அவரது ஆசை நிறைவேறும் நேரத்தில், அவர் பயணித்த கப்பல் எதிர்பாராதவிதமாகப் புயலில் சிக்குகிறது. நாலா திசையிலும் நீந்தி பயணிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். கலிவர் தன்னந்தனியாக ஒரு கரையில் ஒதுங்குகிறார்.
களைப்பு, பசியால் உறங்கிவிடுகிறார். அந்தக் கரை, குள்ள மனிதர்கள் வசிக்கும் லில்லிபுட் என்ற நாட்டின் ஒரு பகுதி. கலிவர் கண்விழித்துப் பார்த்தபோது, அவரைத் தரையோடு பிணைத்து யாரோ கட்டிப் போட்டிருக்கிறார்கள். கட்டை விரல் உயரமே உள்ள குள்ள மனிதர்கள் அம்பு வில்லுடன் சுற்றிலும் நிற்கிறார்கள்.
நூலின் நாயகனோடு சேர்ந்து நாம் நான்கு உலகங்களுக்குப் பயணிக்கிறோம். அசாத்தியமான அற்புத உலகங்கள் அவை. களித்துக் கொண்டாடியும் சிந்தனையில் தோய்ந்தும் உலவுவதற்கான இந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. விமர்சித்து விமர்சித்து மனிதக் கீழ்மைகளை விலக்கியபடி தார்மீகப் பெருங்கரை நோக்கி நகரும் வலுமிகுந்த எதிர்நீச்சல் இந்த நூல். நினைவின் சட்டகங்களுக்குள் என்றும் நம் மனதில் வீற்றிருப்பது.
Be the first to rate this book.