ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள், இவற்றிற்கு இடையே தோன்றிய ஒரு இலக்கிய சாதனைதான் ஷோபா சக்தியின் இந்தநாவல். புலம் பெயர்ந்த ஈழமக்களின் வலிமிகுந்த வாழ்கையை பதிவு செய்துஇருக்கிறார்.
3 ஷோபா சக்தியின் புலிகள் எதிர்ப்பரசியல்
ஷோபா சக்தியின் 'கொரில்லா' நாவலை வாசித்து முடிந்தவுடன் மனதில் வந்து நின்ற சில கருத்துக்கள். நாவலின் வழியே ஷோபாசக்தி முன்வைக்க விரும்புவது நிச்சயமாக புலிகள் எதிர்ப்பரசியல், அகதிகளாக நாடு விட்டு நாடு அலையும் ஈழ மனிதர்களின் வலிகள், இயக்கங்களின் பங்காளி சண்டை, இயக்கங்களுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையின் நடுவே மாட்டிக் கொண்டு மரணத்தையும், துயரங்களையும் ஒருங்கே சந்தித்த ஈழ மக்களின் வலிகள் மற்றும் துயரங்கள். சாதி வேறுபாடுகள் ஈழ மக்களின் வாழ்க்கையிலிருந்து இயக்கங்கள் வரை தொடர்ந்த அவலம்....! மேலும் வரும் எல்லவற்றையும் பேசும் 'கொரில்லா' நாவல் சிங்கள பேரினவாத அரசியலையும், அதன் வழியே தமிழர்கள் நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் துயரங்களை அதிகம் பேசவில்லை.. இரண்டாவது இந்திய அமைதி படை நடந்திய கொடுமைகளை பேசும் நாவல் சிங்கள ராணுவம் தமிழ்ர்கள் மீது நடந்திய கொடுமைகளையும் பேசவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக வாசிப்பிற்கு பிறகு நம் மனதில் வந்து போகிறது. முன்று நிலையங்களில் நாவல் பயணிக்கிறது. அந்தோணிதாசன் என்கிற இளைஞன் பிரெஞ்ச் குடியேற்றம் கேட்டு விண்ணப்பிக்கும் கடிதத்துடன்(ஏற்கனவே இரண்டு முறை அவன் விண்ணப்பம் நிராகரிப்படுகிறது) நாவல் தொடங்கிறது. இரண்டாவது அந்தோணிதாசனின் ஈழ வாழ்க்கையும் அதிலும் இயக்கத்துடன் அவனது உறவும், பிரிவும் விவரிக்கப்படுகிறது. முன்றாவது பகுதியில் பிரெஞ்சு அகதியாக அலையும் அந்தோணிதாசன் வாழ்க்கையும் மேலும் அகதிகளாக வேறு நாட்டில் வாழும் ஈழ மக்களின் மனம் சார்ந்த நெருக்கடிகளை விவரிக்கிறது. என் வாசிப்பில் நேர்கோட்டில் பயணிக்கும் நாவல்களை நான் பெரிதும் விரும்புவதில்லை. 'கொரில்லா' நாவலும் நேர்கோட்டில் பயணிக்கவில்லை என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும். நாவலின் உண்மையான மையம் எது என்று யோசிக்கும் போது குழப்பம் வருகிறது. எல்லா பக்கங்களிலும் ஷோபாசக்தி புலிகள் எதிர்ப்பரசியலை நிறுவ முயல்வது வாசிப்பில் பெரிய சலிப்பை தருகிறது. இரண்டாவது நாவலின் ஊடே அவர் உண்மை சம்பவங்களை சொல்கிறேன் என்று நம்மை அதிகம் குழப்புகிறார் அல்லது நம்மை மேலும் வாசிப்பில் சுற்றவிடுகிறார். முக்கியமாக தந்தையும் கொரில்லா மற்றும் மகன் கொரில்லா என்ற இரண்டு கதாபாத்திரங்கள் வழியே அவர் சொல்ல வருவது என்ன? எல்லா படைப்புகளிலும் நடுநிலையை எதிர்பார்ப்பது கடினம். ஆனால் மிகச்சிறந்த படைப்புகள் மனித மனங்களின் காயங்களை, வன்முறை மற்றும் குரூரத்தையும் ஒரே சேர நடுநிலையாக எழுதப்பட்டவை தானே.. ஷோபாசக்தி 'கொரில்லா' நாவலை நடுநிலையாக எழுதியுள்ளாரா என்று கேள்விக்கு இல்லை என்பதே பதில் ஆனால் ஷோபாசக்தி எழுத்தில் வரும் வசீகரம் நம்மால் மறுக்கமுடியாது ஒன்று..! (அடுத்த அவரின் Box நாவலை அவசியம் வாசிக்க வேண்டும்.)
Vigneswaran 23-01-2019 05:18 pm