அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.
மக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறது. இந்தப் புதிய மாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வது? யாரெல்லாம் வரி செலுத்தவேண்டும்? எதற்கெல்லாம் வரி? எவ்வளவு? சிறு வணிகர்களும் தொழில்முனைவோர்களும் ஆன்லைனில் வர்த்தகம் செய்வோரும்கூட ஜிஎஸ்டியின்கீழ் வருவார்களா?அவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்? இனி தங்கள் தொழில் சார்ந்த நடைமுறைகளை எப்படியெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்?
ஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ஆடிட்டரும் துறை சார்ந்த நிபுணருமான ஜி. கார்த்திகேயன்.
Be the first to rate this book.