அமெரிக்கா மிகச் சிறப்பு வாய்ந்த அறிவியல் ஆய்வுக் கூடங்களையும் பல்கலைக்கழகங்களையும் சக்திவாய்ந்த நிறுவனங்களையும் கொண்ட தேசம். உலகெங்கும் உள்ள படித்த இளைஞர்கள் தங்களின் வளமான எதிர்காலத்திற்காக அமெரிக்கா செல்ல விரும்புகிறார்கள். ஆனால் அரசாங்கப் படிவங்கள், மற்றும் விதிமுறைகளின் குழப்பம் செய்யும் காலதாமதம் அவர்களை விரக்திக்குத் தள்ளுகிறது.
எந்த எந்த விசாவில் அமெரிக்காவிற்கு வர முடியும்? எந்த விசா நிரந்தரக் குடியுரிமையை இலகுவாக்கி, பாதை அமைத்துக் கொடுக்கும்? எளிதாக வழிகாட்டுகிறது இந்நூல்.
பத்மா அர்விந்த் மருத்துவத்துறையில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருபவர். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Be the first to rate this book.