விளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு! குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை. மேற்படிப்பு கற்றுத் தரும் பல மேலாண்மைப் பண்புகளை விளையாட்டு எப்படி சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. சமூகமாக மனிதன் கூடி வாழ வேண்டும்; வலியோரிடமிருந்து எளியோரைக் காக்க வேண்டும்; சக மனிதர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது போன்றவற்றை, சிறு வயதில் விளையாட்டு மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்பதை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் இரத்தின.புகழேந்தி.
Be the first to rate this book.