ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப்பதே மீரான் மைதீனின் கதைகள்! மனிதர்களை விட்டுச் செல்ல முடியவில்லையென்றால், நாம் மண்ணைவிட்டும் செல்ல முடியாது. மண்ணும் மனிதர்களுமாகக் கலந்து கட்டும்போது ஒளிர்கிற அன்பை - நேயத்தை ஓர் இலக்கியம் சுடராக நம் முன்னே கொண்டுவந்து கொட்டுகிற எழுத்துகள் மீரானுடையவை.
“பார் இவ்வுலகை! பார் அதன் இன்பத்தை!” என்று சொல்வதற்கான கலை நயம் என்னவாக இருக்க முடியுமோ, அவ்வாறே இருந்துவிட்ட சில கதைகளின் தொகுப்பு இது.
-களந்தை பீர்முகம்மது
Be the first to rate this book.