எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கோட்பாடு கம்யூனிஸத்தின் அடிப்படை என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்வார்கள். இதை ஆங்கிலத்தில் utopia எனும் பதத்தால் குறிப்பார்கள். இந்த utopia முழு முற்றான ஒரு கற்பனை உலகம். கம்யூனிஸத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடுகளிலேயே ‘எல்லோரும் எல்லாமும்’ பெறுவதில்லை. இந்தியாவில் கம்யூனிஸம் பற்றிய பிரசாரம் மிகைப்பட்ட அளவில் நடக்கிறது. அனைத்து ஊடகங்களும் பெரும்பாலும் கம்யூனிஸ சித்தாந்தத்தின் பிடியில் இருக்கின்றன. பெரும்பாலான திரைப்படங்கள் கம்யூனிஸத்தை ஒரு மாபெரும் லட்சியக் கனவு என்னும் வகையிலேயே சித்திரிக்கின்றன. ஆனால் உலகத் திரைப்படங்கள் அப்படி அல்ல. கம்யூனிஸம் தான் கால் பதித்த நாடுகளில் எல்லாம் எப்படி மனித உரிமைகளுக்கு வேட்டு வைத்தது, ஜனநாயகத்தை எப்படி நசுக்கியது என்பதை விளக்கும் திரைப்படங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். இத்திரைப்படங்கள் கம்யூனிஸத்தை வெறுப்புடன் அணுகவில்லை. மாறாக வரலாற்று யதார்த்தத்துடன் அணுகுகின்றன. மானுட குல வீழ்ச்சியில் கம்யூனிஸத்தின் பங்கு என்ன என்பதை விவாதிக்கின்றன. எதிர்-கம்யூனிஸத் திரைப்படங்களில் முக்கியமானவற்றில் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறார் அருண் பிரபு. #swasam bookart #arun prabu #good bye lenin
Be the first to rate this book.