ஞானக்கூத்தன் (1938-2016) தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கசடதபற, ழ சிற்றிதழ்களின் நிறுவனர்களில் ஒருவர் ஞானக்கூத்தன். கவனம் என்ற கவிதைச் சிற்றிதழையும் கொண்டுவந்தார். மரபுக் கவிதையின் ஒலியைப் புதுக்கவிதையில் கொண்டுவந்து தனித்துவமான ஒரு கவிதை நடையைப் பயன்படுத்தினார். அரசியல் அங்கதம், நினைவில் நிற்கும் உவமைகள். சமகால வாழ்க்கைக் காட்சிகள் ஆகியவை இவரது கவிதையின் முத்திரைகள் எனக் கூறலாம். இவர் கவிதை மட்டுமின்றி இலக்கியம், கவிதையியல், கலை உள்ளிட்ட தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பத்து கவிதைத் தொகுப்புகளும், இரு கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.