பதினைந்து ஆண்டுகளுக்கு முன், `நினைவின் தாழ்வாரங்கள்’ தொடருடன் ஆரம்பித்தது கலாப்ரியாவின் கட்டுரைப் பயணம். அவரையே கட்டுடைத்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் புதிய தடம் பதித்தன. அது வெளிவந்து பதினான்கு ஆண்டுகளாகப் போகிறது. இந்தப் பதினான்கு ஆண்டுகளில் வனவாசம் போய்த் திரும்பிய ராமன் போல நினைவின் வனங்களில் திரிந்தலைந்து அவர் நிறையவே எழுதியுள்ளார். சுஜாதா சொன்னது போல அவ்வப்போது ஒல்லியான கவிதைத் தொகுப்புகளாகக் கொண்டு வந்த அவர் இந்தக் காலகட்டத்தில், கட்டுரைகள், நாவல், சிறுகதைகள், கவிதைகள் என சுமார் நாற்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். இது அவரது பதினான்காவது கட்டுரைத் தொகுப்பாக வருகிறது. மொத்தக் கணக்கிற்கு இது அவரது நாற்பத்தி ஆறாவது புத்தகம்.
Be the first to rate this book.