நாம் நீரை எப்படிப் பயன்படுத்துவது, நெருப்பை எப்படிப் பயன்படுத்துவது என்று முன்னோர்களிடமிருந்து, முந்தைய தலைமுறையினரிடமிருந்து கற்றுக்கொண்டோமோ அதேபோல உள்ளுக்குள் நம்மைத் தேடுவதையும் இம்மாதிரி முன்னோர்களிடம், முன்னோர்களில் சிறந்தவர்களான ஞானிகளிடம் தேடி கற்றுக் கொண்டோம். மனித குலம் இந்தத் தேடலை நிறுத்தவேயில்லை. தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
வெளியுலகம் எளிமையாக இருந்தது. மனிதனின் உள்ளுலகம் சிக்கலாகப் போயிற்று. உன்மனச் சிக்கலை அவிழ்த்து மனிதனைத் தெளிவாக்கி வளமாக்குவதற்கு மதங்களும், இறை நம்பிக்கையும் உதவுகின்றன.
தலைமுறை தலைமுறையாக மனிதர் குலம் இம்மாதிரி ஞானியர் கதைகளை தலையில் தூக்கிக்கொண்டு போய் அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது வழக்கம். இதுதான் நடைமுறை. இது என் முறை.
என்னென்றும் அன்புடன்,
பாலகுமாரன்.
Be the first to rate this book.