இது ஒரு புதுவகை நாவல். வெறும் கேளிக்கைப் பிரதியான மர்ம நாவல் வடிவம், இந்த நாவலில் அறிவைத் தேடித் துப்பறிகிற புதினமாக விரிவடைகிறது. அதன் மூலம் ஒரு தீவிரமான இலக்கியப் பிரதியாகிறது. மர்ம நாவல் என்ற பாணியில் புனைவை நவீனமாய் எழுதிச் செல்லும் இந்தப் பிரதி காலம் காலமாக வீரதீர சாகசங்களை நிகழ்த்திய குதிரைவீரர்களைப் பகடி செய்கிறது.
சுருங்கை என்னும் புனைவு நகரத்தில் நிகழும் இந்தக் கதையில் துப்பறிபவனோடு வரும் அவன் துணைவனின் அசட்டுத்தனம், கோமாளித்தனம், அவன் எதிர்கொள்ளும் விபரீதங்கள் முதலியன நமக்குப் புதிய அனுபவத்தைத் தருகின்றன. துப்பறிபவன் போகும் சூரியக்கோயில், கிரந்தக்கோயில், அவன் நடத்தும் தத்துவ விவாதங்கள் என்று விரியும் இந்த நாவல், ஒரு கதையாடலைத் தொடர் உருவகமாக, எள்ளலுடன் விவரிப்பதன் மூலம் நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
Be the first to rate this book.