கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
– அப்துல் ரகுமான்.
கவிதை அழகும் இசை அழகும் கைகோத்துத் துள்ளிவரும் உலகப்புகழ் பெற்ற கஜல் பாடல்கள் முதல் முறையாக அவற்றின் சந்தம் மாறாமல் தமிழாக்கம் பெறுகின்றன. நூலாசிரியர் அபுல் கலாம் ஆசாத் கஜல் பாடல்களில் ஆழம் தோய்ந்தவர். தமது வலுவான மரபுப்பயிற்சியின் காரணமாக உருது கஜல்களின் எழிலையும் உருக்கத்தையும் அநாயாசமாகத் தமிழ் வடிவத்தில் வார்த்தெடுத்துவிடுகிறார். '
Be the first to rate this book.