காந்தி யார்? அவரை ஏன் நம்முடைய தேசத் தந்தை என்று அழைக்கிறோம்? அவர் வாழ்ந்து பல தலைமுறைகள் கடந்துவிட்ட பிறகும் அவர் தொடர்ந்து பேசப்படக் காரணம் என்ன? அவரைப்பற்றியும் அவருடைய கொள்கைகளைப் பற்றியும் விதவிதமான நூல்கள் ஆண்டுதோறும் வந்து கொண்டிருப்பது ஏன்? வெவ்வேறு நாடுகளில் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றும் இயக்கங்கள், தனி நபர்கள் தோன்றிக்கொண்டே இருப்பது எதனால்? தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர்? அண்ணல் காந்தியைப் பற்றி இளம் தலைமுறையினருக்கு ஓர் எளிமையான, மிகத் தெளிவான அறிமுகத்தை வழங்கும் நூல் இது. கேள்வி, பதில் வடிவில் எழுதப்பட்டிருப்பதால் படிப்பதும் எளிது, புரிந்துகொள்வதும் எளிது, கூடுதல் தகவல்களைத் தேடிச் செல்வதும் எளிது, உங்களுக்குச் சரியாகத் தோன்றும் விஷயங்களைப் பின்பற்றுவதும் எளிது.
Be the first to rate this book.