சிறுதுளி பெருவெள்ளம். வாஸ்தவம் தான்.ஆனால், எங்கு கிடைக்கும் சிறு துளிகள்? ஏரிகள்,குளங்கள் இருந்த இடங்களில்? அபார்ட்மெண்ட்கள் கான்கிரீட்? கட்டடங்கள். நீர் நிலைகள்? சிறுது சிறிதாகத் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரி வராத நாள்கள் திண்டாட்ட நாள்கள். என்னசெய்யலாம்?
இனி வரைபடங்களுக்கு வேலை இருக்காது. இந்தியா, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா - எல்லாமே, பாலைவனங்களாக மாறப்போகின்றன.
தண்ணீர் இனி அடிப்படை உரிமை இல்லை. அடிப்படைத் தேவை மட்டுமே. ஐ.நா. சொல்லிவிட்டது. சரிதான்.
தண்ணீரும் ஒரு பண்டமாகிவிட்டது. பளபள தாளில் பாக்கேஜ் செய்து விற்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கூடிய விரைவில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தோற்கடித்துவிட்டு, முதன்மை இடத்துக்கு வரப்போகிறது தண்ணீர் விற்பனை.
காணாமல் போகும் நதிநீர்ப்பரப்புகளை எப்படி மீட்டெடுப்பது? விவசாயத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது? தேசிய நதிகளை இணைத்துவிட்டால் இந்தியா சுபிட்சம் அடைந்துவிடுமா? இன்றைய தேதியில் அணைகளின் நிலை என்ன? பிற நாடுகள், தண்ணீர்த் தேவையை எப்படிச் சமாளிக்கின்றன? பயமுறுத்துவதற்காக அல்ல. தண்ணீரைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட நூல் இது.
Be the first to rate this book.