எங்கெல்ஸ் எழுதிய இந்தப் புத்தகம் விவசாயிகள் போராட்டத்தின் மூலவேரை விளக்கிச் செல்கிறது. அப்போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள், தமது நிலையை முடிவு செய்ய அவை கையாண்ட மத, அரசியல் கோட்பாடுகளை ஆராய்கிறது. இறுதியாக அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் நிலவி வந்த வரலாற்று, சமூக வாழ்க்கை முறை நிர்ணயித்த இப்போராட்டத்தின் முடிவையும், அரசியல் அமைப்புக்கெதிரான புரட்சியையும் விளக்குகிறது. இப்போராட்டத்துக்குக் காரணம் அரசியல், மதக் கோட்பாடுகளல்ல, மாறாக அப்போது ஜெர்மனியில் நிலவிய விவசாய, தொழில், நிலம், நீர் வழிகள், வர்த்தகம், நிதி ஆகியவற்றின் படிநிலைகளின் விளைவேயாகும். வரலாற்றை இயக்கவியல் பார்வையில் ஆராய்ந்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் புரட்சி பற்றிய மார்க்சின் நூல்களிலும், ‘லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்’ புத்தகத்திலும் மார்க்சின் இயக்கவியல் பார்வையை நாம் காண முடியும்.
Be the first to rate this book.