இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்து வைத்தது ஜெர்மனி. இந்தப் போரில் பலியான தேசமும் ஜெர்மனியேதான். இனி மீண்டும்
தலைதூக்குவது கடினம் என்று உலகம் நிராகரித்தபோது, சுறுசுறுப்புடன் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது ஜெர்மனி. இன்று ஜெர்மனி ஒரு வலிமையான நாடு. ஜெர்மனியர்கள் பளிச்சிடாத துறை என்று ஒன்றையும் சொல்வதற்கில்லை. பொருளாதாரம், வர்த்தகம், போக்குவரத்து, விளையாட்டு, அறிவியல் என ஒவ்வொரு துறையையும் ஜெர்மனியர்கள் வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மக்கள், மொழி, கலாசாரம், பண்பாடு, வரலாறு என்று ஜெர்மனியின் அத்தனை வண்ணங்களையும் பிரதிபலித்துக் காட்டுகிறது இந்நூல்.மினுமினுப்பும் பளபளப்பும் மிக்க தேசமாக ஜெர்மனி இன்று அறியப்படுகிறது. ஆனால், இந்த நிலையை அடைய கொடூரமான யுத்தங்களையும் கடுமையான சரிவுகளையும் பெரும் போராட்டங்களையும் இத்தேசம் சந்திக்க வேண்டியிருந்தது. ஓர் அபூர்வமான வரலாறு.
Be the first to rate this book.