இந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியவியல் படிப்பு, குறிப்பாக இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை பற்றிய படிப்பும் ஆய்வும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொதுவாகச் செருமானியர்களிடையே இவற்றைப் பற்றி அறிய எழுந்துள்ள வேட்கை இந்த அகராதி உருவாக்கத்தின் பின்னணியாகும். செருமன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழ் மொழியின் சொல்வளத்தையும் பயன்பாட்டையும் அறிந்துகொள்ள உதவும் நோக்கத்துடன் இந்த அகராதி தொகுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 12,000 செருமன் தலைச் சொற்களும் 10,600க்கும் மேற்பட்ட ஆக்கச்சொற்களும் இந்த அகராதியில் இடம்பெற்றுள்ளன. செருமன் அகராதி மரபையொட்டி உருவாக்கப்பட்டுள்ள முதல் செருமன் தமிழ் அகராதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.