எல்லாரும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் வரலாற்றில் நின்று நிலைத்த எல்லாருமே புனிதர்கள், கொஞ்சம்கூட குறையே காண முடியாத உத்தமர்கள் என்றுதான். அது உண்மை இல்லை.
சரித்திரம் படைத்தவர்களும் சாதனை புரிந்தவர்களும் கூட சாமானியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தவறுகளில் உழன்றிருக்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி உயர்ந்தார்கள்? தாங்கள் இந்த பூமியில் எதற்காகப் பிறந்தோம் என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சின்ன ஆசைகளைத் தாண்டி என்றென்றும் நிலைக்கும் செயல்களை செய்து முடித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வழிகாட்டிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்ற மாமனிதர்.
அவரைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத பல அற்புதத் தகவல்களை இங்கே நீங்கள் படிக்கலாம். சுவைக்கலாம். பயன்படுத்திக் கொள்ளலாம். பலன் பெறலாம்.
Be the first to rate this book.