மங்கோலியாவின் ஒரு சிறிய நாடோடிக் குழுவில் பிறந்து உலகின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்யும் அளவுக்கு உயர்ந்த சர்வாதிகாரி, செங்கிஸ்கான். இந்தப் பெருமை அவருக்குச் சாதாரணமாகக் கிடைக்கவில்லை. அவரது வெற்றிக்குப் பின் பெரும் போராட்டங்களும் அவமானங்களும் துரோகங்களும் உள்ளன. வெற்றியாளராகக் கருதப்படும் அதே சமயம் செங்கிஸ்கான் ஒரு கொடுங்கோலராகவும் அறியப்படுகிறார். எது அவரை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றது? ஏன் அவர் கொடுங்கோலராக மாறினார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு விடை கிடைக்கும். செங்கிஸ்கானின் வாழ்க்கையை வரலாற்று ரீதியாகவும் உளவியல் பார்வையோடும் ஆராய்ச்சி செய்கிறது இந்தப் புத்தகம். அவரது நேர்மறை - எதிர்மறை எண்ணங்கள், பலம் - பலவீனம் ஆகியவற்றை ஒருங்கே அலசுகிறது. எளிய தமிழில் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ப.சரவணன்.
Be the first to rate this book.