ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. யார் இந்தக் கெய்ஷா...? பிரபுக்களைத் தம் காதல் பார்வையிலும், மயக்கு மொழியிலும் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியா? அல்ல. பாலியல் அடிமையுமல்ல. அவளது விருப்பத்திற்கு மாறாக சக்கரவர்த்தி கூட அவளைத் தீண்ட முடியாது. இசை, நாட்டியம், காதல், காமம் நிறைந்த கலவையே கெய்ஷா. ஒரு கெய்ஷாவின் காதலுக்கு ஏங்கியவர்களும் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. சாமுராய்களின் உறவிற்கு உண்மையாக இருந்து உயிரை அர்ப்பணித்த கெய்ஷாக்களும் உண்டு.
கெய்ஷா உலகத்தில் வலம் வரும் கணவன்களை ஜப்பானிய மனைவிகள் அங்கீகரிக்கிறார்கள். கெய்ஷா ஜப்பானின் மறுக்க முடியாத அடையாளம்; ஜப்பானியக் கலாச்சாரத்தின் அங்கம். கெய்ஷா பாரம்பரியத்தின் மர்மங்களை தனது இருபதாண்டு கால அனுபவத்தின் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார் லெஸ்லி டவுனர்.
Be the first to rate this book.