ஆலிங்கனம் செய்து அணைத்துக்கொள்ளத் தேடுகிறது, தவிக்கிறது, தத்தளிக்கிறது அந்த உள்ளங்கள்.அதோ! கண்ணன் காத்துக்கொண்டுதான் இருக்கிறான்.கண்ணன்மேல் காதல் கொண்டவளான ராதை, ஊடலும் கூடலும் தவிப்பும் தாகமுமாக அல்லல்படுகிறாள்.இரவு.. நிலவு.. தனிமை.. தாபம்!வசந்தகாலத் தென்றல் இளமையின் தாபத்தை விசிறி விடுகிறது.ஜெயதேவருடைய கீதகோவிந்தம், பகவான் கிருஷ்ணன் தனது பக்தர்களுக்காக எந்த அளவுக்கு இறங்கி வருகிறான் என்பதைச் சொல்கிறது.அவன் ராதையிடம் 'உன் தளிர்ப்பாதத்தை எனது தலையின்மீது வை!' என்று சொல்கிறான்.ராதையின் அதீத பக்தியில் மயங்கித்தான், அவன் தன்னையே அவளிடம் கொடுக்கிறான்.எட்டமுடியாத நிலையில் இருப்பவன்தான் தொட்டுத் தழுவும் நிலையிலும் இருக்கிறான்.கீதகோவிந்தம் - இளமை ஊஞ்சலாடும் இன்பப் பூந்தோட்டத்தின் வாசலைத் திறந்துகாட்டுகிறது. சொர்க்கம் சூறாவளியாகி சுழன்றடிக்கிறது.
Be the first to rate this book.