'கங்கவ்வா கங்காமாயி'க்கு கன்னட இலக்கியத்தில் ஒரு சிறப்பான இடம் உண்டு.
அழிக்கும் தன்மையுள்ள போக்குகள் சமூகத்தின் வாயிலாகவே நடத்தப்படுகின்றன என்பது மோகாசி வெளியிட்டுள்ள சித்தாந்தத்தின் சாரம். நாவலின் சூழ்நிலையில் இந்தப் பொருள் வலுவற்றுவிடக் கூடாது என்பதும் 'கங்கவ்வா கங்காமாயி'யின் முக்கியமான நோக்கமாக இருந்திருக்கிறது. ஆகையால் நாவலில் துன்பியல் முடிவின் நிழல் இருந்தும் கூட அதனுடைய மொத்த தரிசனம் இன்பியல் முடிவாக இருக்கிறது. இந்த சித்தாந்தத்திற்கு முதன்மை கொடுத்து மலரும் படைப்பில், அனுபவத்தை கடைவதால்க் வெளிவருகின்ற நஞ்சை முழுமையாக ஜீரணித்துக் கொள்ளும் ஆற்றல் தேவைப்படுவதில்லை. ஏனெனில் பண்பாட்டு மட்டத்திலும் புத்திவாத மட்டத்திலும் அது பரம்பரையாகக் கிடைத்து விடுகிறது. சித்தாந்த சிறப்புகள் படைப்பின் அனுபவத்தை தம்வசப்படுத்திக் கொண்டு விடவில்லை என்பதும் இந்நாவலின் வெற்றியாகும்.
Be the first to rate this book.