கங்கை எத்தனை நீளமானதோ அத்தனை நீளமானது அதன் வரலாறுமு. ஜிவநதி, புனித நதி, மக்களின் வாழ்வாதாரம். அதிசய
உலகம் அது. ஆயிரம் நதிகள் உண்டு இங்கே. ஆனால் கங்கைக்கு மட்டும் ஏன் ரத்தினக் கம்பள வரவேற்பு .நதியைப் பெண்ணாகப்
பார்க்கும் பாரம்பரியம் நம்முடையது என்றாலும் கங்கையை மட்டும் ஏன் கடவுளாக பார்க்கிறோம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கங்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. விவசாயத்துக்கும் மீன் பிடி தொழிலுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கங்கையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கங்கைக்கு இன்னொரு முகம் உண்டு. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ஆண்டு தோறும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள், இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன. திறந்தவெளி குப்பைத் தொட்டியாக மாறிக்கிடக்கிறது புனித நதி. கங்கையின் முழுப் பரிமாணத்தையும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது இந்நூல்.
- லலித் குமார்.
Be the first to rate this book.