“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் சங்கப் புலவர். இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழரோடு தம் பொது வாழ்வைத் தொடங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இக்கொள்கையைக் கடைபிடித்து, மாந்தருக்குள் ஒரு தெய்வமாக உயர்ந்தார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்த மக்களுக்கு அறிவும், ஆர்வமும், ஊக்கமும், ஊட்டி அவர்களை அகிம்சை வழியில் போரிடும் போராட்டக்காரர்களாக மாற்றினார்.
Be the first to rate this book.