ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு.
புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம்பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும் வெளிப்படுத்தும் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் ‘ஏமாற்றும் எளிமை’யுடன், நுட்பமான வாசிப்பில் பல தளங்களில் விரிவுகொள்ளும் பன்முகத்தன்மை கொண்டவை.
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.