1920 முதல் காந்தியின் மரணம் வரை பிரிவினை சம்பந்தமான நிலைப்பாடு, அது மாறிய விதம், கலவர சமயங்களில் அதனை தடுக்க செய்த முயற்சிகள், மனதளவில் பட்ட வேதனைகளைச் சிறப்பாக விளக்கும் ஒரு நூல். இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்கான காரணங்களைத் தருகிறது இந்நூல்.
கிலாபத் இயக்கம்(1919) இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பெரும் பங்காற்றியிருகிறது. ஆனால் அதனைத் தொடர்ந்த மோதல்கள் சிறிது சிறிதாகப் பெருகியிருக்கிறது. 1930கள் வரை யாருக்கும் பிரிவினை எண்ணம் தோன்றவில்லை. ஜின்னாவின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், மாற்றாக பிரிவினை முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். அதன் பிறகு ஒன்றுபட்ட நிலை ஏற்படவில்லை. எனினும் அபுல் கலாம் ஆசாத் போன்றோர் காங்கிரசில் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். இந்நூல் பிரிவினை காலத்தைப் பற்றிய தொகுப்பாக அமைந்திருக்கிறது.
காந்தி ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று ஒவ்வொரு நாளும் எதிர்த்து எழுதி வந்தவர் பெரியார். ஆனால் மதவாத சக்திகளால் காந்தி கொலை செய்யப்பட்டதை அறிந்த மறுகணமே, இருந்தது ஆரிய காந்தி, இறந்தது நம் காந்தியார் என்று சொல்ல ஆரம்பித்தார். நாடு முழுவதும் காந்திக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது திராவிட இயக்கம். அதன் தொடர்ச்சியாக ஆசைத்தம்பி எழுதிய புத்தகம் வகுப்புவாதத்தை தூண்டியதாக தடைசெய்யப்பட்டது. அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.