50,000 பஞ்சாபி படை வீரர்கள் சாதிக்க முடியாததை, காந்தி என்ற பெயருடைய நிராயுதபாணி மனிதர் சாதித்துக் காட்டினார். அமைதியை நிலைநாட்டினார்.
- வைஸ்ராய் மௌண்ட் பேட்டன்
காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அஹிம்சை அணுகுமுறைக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நாங்கள் இப்பொழுதுதான் புரிந்துகொண்டோம்.
- ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை
உடலைத் தானாகவே வருத்திக் கொள்வது, உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது, அதன் மூலம் இறைவனுக்கு அருகே செல்ல முயற்சிப்பதுதான் உண்ணாவிரதம். ஆன்மீகம் சார்ந்ததாக, இறை சார்ந்ததாக அதனைக் கண்டார் அண்ணல். அது ஒரு தவம். அது ஒரு யோஹம். தான் தடுமாறுகிறபோது அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் தவறு செய்கிறபோது, அதற்குப் பிராயச்சித்தமாகத்தான் அண்ணல் உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளார்.
- அ. பிச்சை
Be the first to rate this book.