சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி அவர்களுக்கான உயிர்ச் சிலையாக இந்தப் புத்தகம் எழுந்து நிற்கிறது. பழுத்த ஆத்திகர், தூய்மையான காங்கிரஸ்காரர், சரியான இந்திய விடுதலைப் போராளி, காந்தியின் பக்தரான அவரை பிராமண துவேஷி, வகுப்பு துவேஷி, கருப்புச் சட்டை அணியாத ஈ.வே.ரா என்று சொல்லி காங்கிரஸ்காரர்கள், தேசிய பத்திரிகைகள் பட்டம் சூட்டி பதவியில் இருந்து இறக்கினார்கள்; அரசியலைவிட்டே துரத்தினார்கள். கதர் சட்டை மனிதருக்குக் காவலுக்கு இருந்தது கருப்புச் சட்டைகள். அந்த வரலாற்றைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.