...பழைய செய்திகளோடு புத்தகம் முடிந்துவிடவில்லை. ரோஹித் வெமுலா தற்கொலை, கன்னய குமார் மீது தேசத்துரோக வழக்கு, பல்கலைக்கழக வளாகங்களில் இந்திய சமூக நிலைமைகள் பற்றி விவாதிப்பதற்குப் போடப்படுகிற தடைகள் பற்றியும் விவாதிக்கிறது. கல்புர்கி கொலையின் பின்னணியில், மாற்றுச் சிந்தனைகளை மக்களிடையே கொண்டுசெல்லும் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் மதவெறி சார்ந்த சர்வாதிகார மூர்க்கம் இருப்பதைப் புரிந்துகொள்ள வைக்கிறது. நாட்டின் அரசமைப்பு சாசனம் கூறுகிற ‘அறிவியல் மனப்பான்மையுள்ள சமுதாயத்தை வளர்த்தல்’ என்ற லட்சியத்திற்கு நேர்மாறாக புராண காலத்திலேயே ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ இருந்தது என்று பிரதமரே பேசுகிற அபத்தத்தை விமர்சிக்கிறது. கட்டுரைகளாகவும், ஆங்காங்கே கேள்வி--பதில் வடிவிலும் புத்தகம் அமைந்திருப்பது, கனமான உள்ளடக்கத்திற்கான வாசிப்பை எளிதாக்குகிறது. மேலும் விரிவாக வரலாற்றையும் சித்தாந்தப் போராட்டங்களையும் தேடிப்படிக்கத் தூண்டுகிறது.
Be the first to rate this book.